தலவாக்கலை நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞர் (மாரிமுத்து மனோஜ் வயது 20) பாபுள் வெற்றிலையை வைத்திருந்ததாக கூறி பொலிஸார் கைது செய்ய முயற்சி செய்த போது பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியதால் சம்பந்தப்பட்ட இளைஞனை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனை அவதானித்த நபர் நீர்த்தேக்கத்தில் பாய்ந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவத்தினை கண்டித்து நேற்று மாலை தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியை மறித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பிரதேசத்தில் பதட்டநிலை காணப்பட்டது. எனினும் இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்ட போதிலும் காணாமல் போனவரை குறிப்பிட்ட நேரத்தில் மீட்கவில்லை என கூறி இன்று காலை 10 மணியளவில் அதிகமான மக்கள் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகர மத்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன் காரணமாக போக்குவரத்து சேவை பல மணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது. அத்தோடு அதன் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதன்போது பல மணி நேரம் புகையிரத சேவை சம்பவ இடத்தில் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் புகையிரதம் திரும்பி நானுஓயா வரை சென்றது. இதேவேளை பாதுகாப்பு கருதி பொலிஸாரும் அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தலவாக்கலை பகுதியில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நீர்த்தேக்கத்தில் குதித்த இளைஞரின் சடலம் இன்றுமாலை மீட்கப்பட்டுள்ளது. |
தலவாக்கலையில் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு!
Related Post:
Add Comments