சசீந்தர ராஜபக்ஸவும் குடும்பமும் நண்பர்களும்...
ராஜபக்ஸக்களின் உல்லாச வாழ்வு குறித்த தகவல்கள் இலங்கை ஊடகங்களில் முதலிடத்தை பெறுகின்றன. அந்த வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அண்ணர் சமல் ராஜபக்ஸவின் மகன் சசீந்திர ராஜபக்ஸ தனது உறவினர்கள் நண்பர்களுடன் உல்லாசமாய் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன...சசீந்திர ராஜபக்ஸ ஊவாமாகாணத்தின் முன்னாள் முதல்வர் தற்போதைய மாகாண சபை உறுப்பினர்....
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு காமன்வெல்த் மாநாட்டின் பொழுது தனியார் நிறுவனம் ஒன்றில் குத்தைகைக்கு எடுக்க பட்டு இரண்டு பேரூந்துகள் வழங்க பட்டன இதன்வருட வாடகை 1.8 மில்லியன் ஆகும் .இந்த குத்தகை அடிப்படையில் பெற பட்ட சொகுசு வண்டிகளை ராஜபக்ஸ குடும்பத்தினரும் அவர்களுக்கு நெருங்கியவர்களும் தமது உல்லாச வாழ்வுக்கு பயன்படுத்தியதாக தகவல்கள் படங்களுடன் வெளிவந்துள்ளன...
குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்திய சோதனையின் போது இந்தப் பேரூந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நடத்த பட்ட விசாரணையின் போது அரசாங்கத்தின் இந்த உல்லாச பேருந்துகளின் வாடகை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசாங்க பணத்தில் செலவிடப்பட்டுள்ளது. இதே வேளை சில ஊடகங்கள் வெளியிட்டு இருக்கும் நாமல் ராஜபக்ஸ குறித்த தகவலுக்கும் இந்தப் படங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.