தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே அனுமதித்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிதக்கும் ஆயுதக் கப்பல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆயுதங்களை வைத்திருந்த ரக்ன லங்கா மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வழங்க தாமே அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய ஆரம்ப கட்ட வாக்கு மூலத்தில் அவர் இதனைக் ஓப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பாரியளவில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் கோதபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக குறித்த இரண்டு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தன்னியங்கி துப்பாக்கிகள் வழங்கப்பட்டமை குறித்து மூன்று பேர் அடங்கிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடாத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.