13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதற்கான அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தனியார் வானொலிச் சேவையொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டுமென இந்திய பிரதமர் வெளியிட்ட கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதனைப் போன்று மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களோ அல்லது மேலதிக அதிகாரங்களோ வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களோ அல்லது மேலதிக அதிகாரங்களோ வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் முதல் கட்டமாக 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக துரித கதியில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஏற்கனவே 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.