2008- 2009காலப்பகுதியில் மாணவா்கடத்தல் சம்பவங்களுடன் தொடா்புடையவா்களை காப்பாற்ற அரசாங்கம் முயற்சி

2008- 2009காலப்பகுதியில்  மாணவா்கடத்தல்  சம்பவங்களுடன் தொடா்புடையவா்களை  காப்பாற்ற
அரசாங்கம் முயற்சி
​2008 முதல் 2009 வரையான காலப்பகுதியில் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் தமிழ் சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்ட பின்னர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் கடற்படைதளபதிக்குள்ள தொடர்பு குறித்த விடயங்களை மறைத்து அவரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன் உண்மையான நோக்கம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்றுவதே. குறிப்பிட்ட வெள்ளை வான் நடவடிக்கைகள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் கட்டளையின் கீழேயே இடபெற்றன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதை அவ்வேளை கடற்படைத்தளபதியாக பதவி வகித்த வசந்த கரனாகொட நன்கு அறிந்திருந்தார்.
 
இதன் காரணமாகவே கரனாகொடவின் நெருங்கிய உதவியாளராக செயற்பட்ட சம்பத் முனசிங்க அந்த கொலைகார குழுவின் தலைராக தெரிவு செய்யப்பட்டார். கடற்படை தளபதியே அவரை நியமித்திருந்தார்.
 
 
 
கொமடோர் டி.கேபிதிசநாயக்க,உட்பட 12 கடற்படையினர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். பின்னர் சம்பத் முனசிங்க முன்னாள் கடற்படை தளபதியின் மனைவியுடன் உறவை ஏற்படுத்தியிருந்தார், கரனாகொடவிற்கு இது தெரியவந்ததை தொடர்ந்து முனசிங்க தலைமறைவானர் .எனினும் அவரை கண்டுபிடித்து கொலைசெய்யும் பொறுப்பை அவ்வேளை கடற்படைபேச்சாளாராக விளங்கிய டி.கேபிதிசநாயக்கவிடம் கரனாகொட ஓப்படைத்திருந்தார்.
 
 
 
எனினும் தசநாயக்கா தனது தளபதியின் கட்டளையை நிறைவேற்றாமல் முனசிங்கவை வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல அனுமதித்தார்.
 
எனினும் இது தெரியவந்ததும் இருவரையும் பழிவாங்குவதற்காக முன்னாள் கடற்படைதளபதி, மாணவர்கள் கடத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார். அவர்கள் இருவரையும் இந்த விவகாரத்தில் சிக்கவைப்பதே அவரின் நோக்கம்.கடத்தி கொல்லப்பட்ட மாணவர்களின் அடையாள அட்டைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியவரும்  முன்னாள் கடற்படை தளபதியே.
 
எனினும் இதனை அறிந்த முனசிங்க, உண்மையை பகிரங்கப்படுத்த தீர்மானித்தார்.அவர் முன்னாள் கடற்படைதளபதி குறித்து முன்னாள்இராணுவ தளபதி சரத்பொன்சேகா சீற்றமடைந்துள்ளதை அறிந்திருந்தார்,அவர் பொன்சேகாவிடம் வெள்ளை வான் கடத்தல்களில் முன்னாள் கடற்படைதளபதிக்கு தொடர்பிருப்பதை தெரிவித்ததுடன் தனக்கு பாதுகாப்பை வழங்குமாறு கோரியிருந்தார்.
 
இதன் பின்னர் பொன்சேகாவே முனசிங்கவை பொலிஸாரிடம் சரணடையுமாறும் கோரியிருந்தார், வெளியிலிருந்தால் அவர் கொல்லப்படுவார் என்பதை சரத்பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.பின்னர் அவரே சம்பத்தை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளித்திருந்தார்.இந்த சம்பவம் 2009 யூன் மாதத்தில் இடம்பெற்றிருந்தது.அவ்வேளை நேவி முனசிங்க என்பவர் கைது என ஊடகங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த நேவி சம்பத்தே தற்போதைய சம்பத் முனசிங்க
 
சம்பத் முனசிங்க முன்னாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கொலுரேயின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செல்வாக்கு காரணமாகவும், கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில்  அவர் கொலைகளில் ஈடுபட்டதாலும்,சிறிது காலம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
 
இதற்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த விவகாரங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. எனினும் பொலிஸார் பல தகவல்களை மறைத்துவருகின்றனர்.
 
குறிப்பாக முன்னாள் கடற்படைதளபதியை இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன.அவரிற்கு இது குறித்து எதுவும் தெரியாது என காண்பிக்க முனையும் பொலிஸார் முழுகுற்றச்சாட்டுகளையும் அவரது சகாக்கள் மேல் போடுவதற்கு முயல்கின்றனர்.
 
வசந்த கரானகொட மீது கவனம் திரும்பினால் இயல்பாகவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது கவனம் திரும்பும் என்பதே இதற்கான முக்கிய காரணம்.
 
 இதன் மூலம் தற்போதைய அரசாங்கம் ராஜபக்சாக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்பபோவதில்லை என்பதும்,படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர்களை பாதுகாத்துகொண்டு கனிஸ்ட தர அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தப்போகின்றது என்பதும் புலனாகின்றது.
 
2008-9 இல் பாடசாலை மாணவர்கள் காணமற்போனவேளை அப்போதைய அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கடற்படைத் தளபதியிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.அதற்கு அம்மாணவர்கள் கடற்படையின் தடுப்பில் உள்ளனர் என கரனாகொட பதிலளித்துள்ளார்.இதன் மூலம் மாணவர்கள் எங்குள்ளனர் என்பது கடற்படைதளபதிக்கு தெரிந்திருந்தமை நன்கு புலனாகியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila