குற்றவியல் நடவடிக்கை முறைமை சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை நேற்று நாடாளுமன்றத்தில் 53 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி கட்டளை மீதான விவாதத் தின் நிறைவில் அதனை நிறைவேற் றும் பொருட்டு பெயர் கூவி வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று அநுரகுமார கேட்டுக்கொண்டதற்கிணங்க பெயர்கூவி வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.
இதன்போது ஜனநாயக தேசியக் கூட்டணி மாற்றுக்குழு உறுப்பின ரான அஜித்குமார மாத்திரமே எதிர்த்து வாக்களிக்க அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாக வாக்களித்தது. சபையில் இருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரே ஆதரவாக வாக்களித்தனர்.
அத்துடன், மேற்படி வாக்கெடுப்பின் போது பிரதமர் ரணில் விக்கிர மசிங்க உட்பட அமைச்சர்கள் பலரும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் சபையில் சமுகமளித் திருக்கவில்லை.இதேவேளை, சபையில் அமர்ந்தி ருந்த முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ ஆகிய இருவரும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது சபையிலிருந்து எழுந்து வெளியேறினர்.
மேலும் வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சபையின் கதவைத்திறந்து உள்நுழைய எத்தனித்த உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மீண்டும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இறுதியில் கட்டளைக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றதாக அறிவித்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், கட்டளை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
| |
நிறைவேறியது குற்றவியல் நடவடிக்கைக்கான சட்டக்கோவை
Related Post:
Add Comments