நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதாசார முறை இரத்து?

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் விகிதாசார முறை இரத்துச் செய்யப்பட்டு தொகுதி வாரியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. தொகுதி வாரியாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 22 மாவட்டங்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 70 உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலமாக 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
20 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5 பெண்களை நியமிக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த தேர்தல் முறை மாற்றத்தை 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இது சம்பந்தமாக இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இறுதியாக 1977 ஆம் ஆண்டு தொகுதிவாரி தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
1977 ஆம் ஆண்டு தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
147 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் சங்கம் ஒரு தொகுதியில் வென்றது. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளரும் வெற்றிபெற்றிருந்தார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன போட்டியிட்ட எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila