உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கான ஆயுத விற்பனையின் பின்னணியில் மகிந்த அரசாங்கம்--

உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கான ஆயுத விற்பனையின் பின்னணியில் மகிந்த அரசாங்கம்--
 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை வெற்றி பெறச்செய்வதற்கான முயற்சிகள் நுவரேலியாவின் ஜனாதிபதியின் மாளிகையில்மு ன்னனெடுக்கப்பட்டது  பலருக்கு தெரியாத விடயம். இந்த நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தவர் தற்போது உக்ரைன் ஆயுத கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஷியாவிற்கான முன்னாள்  தூதுவர் உதயங்க வீரதுங்க.

அவர் முன்னாள் ஜனாதிபதிக்கு  என்னவகையில் உறவினர் என்பது குறித்து ஊடகங்கள் பிழையான தகவல்களை வழங்கிவருகின்றன.இவர் மகிந்தராஜபக்சவின் தாயின் சகோதரியின் மகன் என்பதே உண்மை.

ஜனவரி 8 ம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியல்ரீதீயாக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து தூதுவர்களையும் நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.அந்த பட்டியலில் உதயங்காவும் இடம்பெற்றிருந்தார்.

எனினும் அதற்கு முன்னரே இலங்கை வந்திருந்த உதயங்க மகிந்த ராஜபக்சவின் பிரச்சார பணிகளை தீவிரமாக முன்னெடுத்திருந்தார்.

எனினும் அவருக்கு தனது நடவடிக்கைகள் குறித்த இரகசிய விசாரணைகள் இடம்பெறுவது அவ்வேளை தெரிந்திருக்கவில்லை.

அவ்வேளை உதயங்க குறித்த விசாரணைக்காக புதுடில்லியில் உள்ள உக்ரைன் தூதுவரை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பணியாற்றிய சேனுகா செனிவரத்தின சந்தித்துபேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இது மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றிருந்தது.

உக்ரைன் அரசபடையினருக்கு எதிராக போராடி வரும் ரஷ்யா சார்பு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது தொடர்பாகவே இந்த இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.உக்ரைன் அரசாங்கம் உதயங்காவின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு முறைப்பாடு செய்திருந்ததை தொடர்ந்தே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

மகிந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் புதுடில்லி சென்று இது குறித்து உக்ரைன் தூதுவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு சேனுக்காவை பணித்திருந்தார்.தாங்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து அவர்கள் அறிக்கை சமர்ப்பித்த போதிலும் அதன் பின்னர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றது தெரியவந்ததும் உதயங்க இலங்கையிலிருந்து மொஸ்கோ புறப்பட்டார்.புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் அவர் சில நாட்கள் தூதுவராக பணியாற்றினார். இலங்கைக்கு வருமாறு அழைக்கப்பட்டதும் காணமற்போய்விட்டார். அவர் எங்கிருக்கின்றார் என்பது பெரும் மர்மமாக காணப்படுகின்றது.

உக்ரைன் சட்டமாஅதிபர் தர அதிகாரி அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கீழ் உதயங்காவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு முயன்றுவருகின்றார். உதயங்க தற்போது தூதுவர் இல்லை என்பதால் அவர் விசேட விடுபாட்டுரிமைகள் எதனையும் அனுபவிக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கையை எடுப்பது சுலபம்.

வெளிவிவகார அமைச்சரிற்கு இது குறித்த எச்சரிகையை உக்ரைன் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.இதனை தொடர்ந்து அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றது.

உள்நாட்டு விசாரணையொன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை மேலதிக தகவல்களை பெறுவதற்காக இரு அதிகாரிகள் உக்ரைன் செல்லவுள்ளனர்.மங்கள சமரவீரவும் அங்கு செல்வது குறித்து ஆராய்ந்து வருகின்றார்.சர்வதேச  அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளின் உதவியை பெறுவதற்கும் அவர் தீர்மானித்துள்ளார்.

தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் உக்ரைனில் வாழ்ந்த உதயங்க அங்கு பிரபலமான கிளப்லங்கா என்ற உணவு விடுதியை நடத்திவந்தார்.உதயங்க மிக சரளமாhக ரஷ்சிய மொழியில் உரையாடக்கூடியவர்.

ஓரு முறை உதயங்காவின் உரையொன்றை செவிமடுத்த முன்னாள் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கேய் விக்டோவிர்ச் முன்னாள் வெளிவிவகா அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரிடம் உதயங்க உக்ரைனியர்கள் போல பேசுவதாக தெரிவித்திருந்தார்.

சுதந்திரத்திற்கு பிந்திய இலங்கையின் வரலாற்றில் தூதுவர் ஓருவர் மீது இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை.

ஆயுத விற்பனையின் பின்னணியில் மகிந்த அரசாங்கம்

புதுடில்லியிலுள்ள உக்ரைன் தூதரகம் அங்குள்ள இலங்கை தூதரகத்திடம் வழங்கிய ஆவணமொன்றை தொடர்ந்து இந்த விவகாரம் முதலில் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட ஆவணத்தில் உதயங்கா குறித்த தங்களது குற்றச்சாட்டை வெளியிட்டிருந்த உக்ரைன் அந்த ஆவணத்துடன் இணைக்கப்பட்டிருந்த இன்னுமொரு ஆவணத்தில் உதயங்க உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கிய ஆயுதங்கள் பற்றிய சகலவிபரங்களையும் குறிப்பிட்டிருந்தது.

இந்த பட்டியலில் ஜேர்மனி மற்றும்சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் சிறிய கைத்துப்பாக்கிகள் மற்றும் இத்தாலி, துருக்கியில் தயாரிக்கப்படும் சிறிய ஆயுதங்கள் என்பன அடங்கியுள்ளன.

இந்த பட்டியலை ஆராய்ந்துள்ள இலங்கை அதிகாரிகள் எவ்வாறு தூதுவர் ஓருவர் தான் பணிபுரியும் நாட்டிற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியுமென அதிர்ந்துபோயுள்ளனர்.

மேலும் உக்ரைன் அரசாங்கம் தனது கடிதமொன்றில் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்ட திகதிகள் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளதுடன் அதனை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.இந்த விடயமும் இலங்கை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதயங்க இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடனேயே இந்த ஆயுத விற்பனையில் ஈடுபட்டார் என உக்ரைன் கருதுவது இதன் மூலம் புலப்படுவதாக அதிகாரிகள் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila