விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் , மேலும் புலிகளுக்காக பல ரகசிய கட்டங்களை அமைத்துக்கொடுக்க உதவியவருமான திவாகரனை(47) இலங்கை அரசு தற்போது விடுதலை செய்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. புலிகளின் தலைவர் ரகசிய கூட்டங்களை நடத்த ஏதுவான பல கட்டங்களை திவாகரன் வடிவமைத்து நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். விமானக் குண்டுகள் துளைக்காத கட்டிடங்களை நிர்மாணிப்பதில் இவர் வல்லவர். தனது எஞ்சினியர் படிப்பை இவர் பெரதேனியா பல்கலைக் கழகத்தில் முடித்தவர்.
இவரை 28 ஜூலை 2013ம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கோட்டபாயவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். மேலும் இவர் மீது வேண்டும் என்றே வழக்குப் பதிவுசெய்யாமல் தொடர்ந்தும் மறியலில் வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் மாறியுள்ள நிலையில், மகசீன் சிறையில் இருந்த திவாகரனை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.