ஆள்கடத்தி கப்பம் பெற்றவரா?

வவுனியாவில் இலங்கை புலனாய்வு பிரிவின் நபர் மாவீரர் தினத்தில் சுடரேற்றி அ ஞ்சலித்த விவகாரம் மூலம் கொலையாளியின் முகம் அம்பலமாகியுள்ளதையடுத்து மக்கள் குறித்த நபரை அடையாளங்கண்டுள்ளனர்.

வவுனியாவில் பல ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகளை அரங்கேற்றியதாக நம்பப்படும் குறித்த நபர் இலங்கை புலனாய்வு கட்டமைப்பில் நீண்ட காலமாக வவுனியாவை மையமாக வைத்து செயற்படுபவரென சொல்லப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் இளைஞர்கள்,யுவதிகளை திட்டமிட்டு விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் போன்று அடையாளப்படுத்தி கைது செய்வதும் அதன் பின்னர் அவர்களை விடுவிக்க பணம் பெறுவதிலுமேயே குறித்த நபர் முன்னின்று செயற்பட்டு வந்திருந்தவரெனவும் வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க வந்திருந்தவர்களை புகைப்படம் பிடிக்கவே குறித்த நபர் அங்கு பிரசன்னமாகியிருந்ததாக தெரியவருகின்றது.அவரை அங்கு சிலர் அடையாளம் கண்டிருந்த நிலையில் தன்னை புலி ஆதரவாளராக காண்பித்துக்கொண்டு தப்பிக்க முற்பட்ட வேளையிலேயே ஊடகவியலாளர்களது புகைப்பட கருவியினுள் அகப்பட்டு கொண்டதாக தெரியவருகின்றது.

இறுதி யுத்தத்தில் தப்பித்த ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள் வவுனியாவில் தங்கியிருந்த நிலையில் சில துணை ஆயுதக்குழுக்கள் சகிதம் அவர்களை கடத்துவதிலும் பின்னர் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க கப்பம் கோருவதிலும் ஈடுப்பட்டவரென குடும்பங்கள் அடையாளப்படுத்தியுள்ளன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila