முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் உளவாளிகள் குழப்பங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றி வரும் கோதபாயவின் உளவாளிகள் தொடர்ந்தும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளுடன் புதிய அரசாங்கம் கட்டியெழுப்பி வரும் இணக்கப்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 10 தமிழ்ப் பிரஜைகள் கைது செய்யப்பட்டமை, மற்றும் பாலேந்திரன் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளைம, குறித்து சர்வதேச அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாலந்திரேன் ஜெயக்குமாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையென்றால் தமது வடக்கு விஜயத்திற்கு முன்னதாக அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்த போதிலும் புலனாய்வுப் பிரிவினர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி உறுப்பினர்க என்ற சந்தேகத்தின் பேரில் முருகேசு பகீரதி என்பவர், மங்கள சமரவீர ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவை ஆணையாளரை சந்தித்த தினத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகீரதி இலங்கை சென்று சில நாட்கள் தங்கியிருந்த போது அவர் கைது இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.