நாட்டின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகமான தந்தி தொலைக் காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்று நேற்று முன்தினம் வலம்புரி பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர் எனவும் எனக்கு விக்னேஸ்வரன் தேவையில்லை என்றும் அந்த நேர்காணலின்போதுஅவர் கூறியுள்ளார்.
இக்கருத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிப்பதாகவும் இது ரணிலின் குள்ள அரசியல் என்றும் கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட மாதர் அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் நேற்று பச்சிலைப்பள்ளி ப.நோ.கூட் டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்,
ஒரு நாட்டினுடைய பிரதமர் அந்நாட்டின் தலைவர் என நாம் எண்ணினோம். இவர்களுடன் இணைந்து இணக்க அரசியல் நடத்த முடியும் என நினைத்தோம். நம்பியிருந்தோம்.
ஆட்சிக்கு அமர்த்தப்பட்ட சில நாட்களிலேயே ஐ.தே.கட்சி தமிழ் மக்கள் மீதான தீர்வு எப்படி இருக்கும் என்பதை கட்சியின் தலை வரும் நாட்டின் பிரதமருமான ரணில் வழங்கிய நேர்காணலில் இருந்து ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ளமுடிகின்றது.
இன்று தமிழ்மக்களுடைய அரசியல் அமைப்பினை சிதைப்பதற்கும் அழிப்பதற்கும் கங்கணம் கட்டியுள்ளார்.
இந்த நாதியற்ற குணம் கொண்ட ரணிலின் கூற்றினை தமிழ்மக்கள் எப்போதே நன்கு அறிவர்.
யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துவதற்கும் தனது சிந்தனையினை பரப்புவதற்குமே இவரது நோக்கம் அமைந்துள்ளது.
கடந்த 30 வருட கால ஆயுத போராட்ட காலப்பகுதியில் ஐ.தே.கட்சியினால் தமிழ்மக்கள் அடைந்த துன்ப துயரங்கள் அளப்பெரியவை.யாழ்ப்பாண நூலகத்தை எரித்தவர்கள் சந்திரிகா அம்மையார் அரசியல் தீர்வு திட்ட பொதியை பாராளுமன்றில் கொண்டு வந்த போது அதனை பாராளுமன்றில் எரித்த பெருமை ரணிலையே சாரும்.
இவ்வாறான ஒருவர் வடக்கு மாகாண மாகாண முதலமைச்சரை விழித்து கருத்துக் கூறுவதற்கு அருகதை அற்றவர்.இது கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
தந்தை செல்வா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆகியோருக்கு பின்னரும் தமிழ்மக்களுடைய அரசில் தலைமைத்துவம் நன்கு சிந்தித்தே முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த்தேசியக் தலைமைத்துவத்திற்கான தலைவர் என வடக்கு மாகாண முதலமைச் சராக கொண்டு வந்தது. அவரை குறை கூறுவது என்பது ஏற்றுக் கொள்ளகூடிய தொன்றல்ல. கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இதயத் துடிப்பையும் நாடித்துடிப்பையும் அறிந்தே வடக்கு மாகாணசபைக் கூட்டத்தில் இன அழிப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ஒட்டுமொத்த தமிழ்மக்களின் முடிவை காலம் காலமாக சிங்கள ஆட்சியாளர் தமிழ் மக்களை அழித்தமைக்கான ஒரு தீர்மானமாகும்.
இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு நாட்டின் பிரதமர் வடக்கு மாகாண முதல மைச்சரின் கூற்றுக்களை பொய் என்றும் பொறுப்பற்ற செயல் எனவும் கூறுவது வியக்கத்தக்கதொன்றாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.