யாழில் இடம்பெற்ற வாள்வெ ட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படை யினரால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் மேற்கு பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞனே இதில் கைது செய்யப்பட்டவராவார்.
யாழ் குடாநாட்டில்
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந் தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றத்தடுப்பு பிரிவு, விசேட அதிர டிப்படையினரின் தேடுதல் நடவடிக் கையின் மூலம் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் நேற்று அதிகாலை விசேட அதிரடிப் படையின் ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத் தின் பேரில் இளை ஞர் ஒருவர் சோத னைக்குட்படுத்தப்ப ட்டுள்ளார்.
அப்போது அவ ருடைய தொலைபே சியில் வாள் வெட்டு குழுக்களுடன் தொடர்புடையதான புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு சம் பவங்களுடன் தொடர்புடையதாக கடந்த இரண்டு வாரங்களில் மட் டும் 20 க்கும் மேற் பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.