தற்போதை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினதும் முயற்சியினாலேயே இது சாத்தியமானது எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் தடையை நீடித்துள்ளது என வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளின் தடையை நீடிக்க முடிந்துள்ளது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பு கொண்டு இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த நவம்பரில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியுடன் தொடர்புகொண்டு இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்தார் என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.