அப்பாடசாலையில் கடமை நேரத்தில் இருந்த காவலாளிகள் இருவரை சந்தேகத்தில் பெயரில் இன்று கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், பாடசாலையின் காவலாளிகள் இருவரையும் இன்றையதினம் அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 19ஆம் திகதி குறித்த பாடசாலையின் நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்த நீரை பருகிய 26 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்கள்.
தொடர்புடைய செய்தி- விஷம் கலந்த நீரை அருந்திய மாணவர்களை வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் நேரில் சென்று பார்வை