ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடத்த ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ஸக்களை பாதுகாத்து வருவதாக அதுரலிய தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்பட்டால் கட்சி இரண்டாக பிளவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, ஐக்கிய தேசியக் கட்சி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்குத் தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.