முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய வீட்டுத்திட்டத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய வீட்டுத்திட்ட புள்ளி வழங்கல் முறையால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்களுக்கே அதிக புள்ளியிடல் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த முறைமையின் அடிப்படையிலேயே வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
இதனால் குடும்பத்தில் அதிக உறுப்பினர்களை போரில் இழந்த குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக கணவன்மாரை இழந்து ஒரு குழந்தையுடன் வாழும் பெண்கள், இரண்டு உறுப்பினர்களை கொண்ட குடும்பங்கள் என்பன இதனால் கடுயைமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாம் இந்திய வீட்டுத்திட்டத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் கூறுகின்றனர். மீள்குடியேற்றப்பட்ட நாட்களிலிருந்து தாம் தற்காலிக கூடாரங்களில் வாழ்வதாகவும் அந்த மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு கிழக்கில் பல இடங்களில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளனர். வன்னியில் பெருமளமான மக்கள் இவ்வாறு வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாத நிலையில் வசித்து வருகின்றனர்.
எனவே இவ்வாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தாமல் அவர் ஆறக்கூடிய வீமொன்னை இந்திய வீட்டுத்திட்டத்தில் வழங்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படடுள்ளது.