கோடாரியினால் தாக்குதலுக்கு உள்ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் கோடரியினால் தாக்கப்பட்ட அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கோடாரியினால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரான 34 வயதான லக்மால் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் பதில் நீதவான் சரசி இத்தவெல உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.