போலியான குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் தாம் கலந்தாலோசித்து வருவதாக ஐ.நா. சபையின் இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பான செய்திகளை முன்வைத்து நாட்டுக்குஅபகீர்த்தியை ஏற்படுத்தும் வெளிவிவகார அமைச்சர் அப் பத விக்கே தகுதியற்றவர் எனவும் அவர் குற் றம் சாட்டியுள்ளார்.நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமாரா குணநாயகம் 1980ஆம் ஆண்டு இறுதி பகுதிகளில் புலிகளின் ஆதரவு அமைப்பொன்றுடன் இணைந்து செயற்பட்டதுடன், புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களையும் முன்வைத்தார் என வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் தமாரா குணநாயகம் மேலும் கூறுகையில், அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காலப்பகுதியில் அவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இணைந்து முன்னெடுத்த அன்னையர்கள் அமைப்புடன் அனுசரணையாக செயற்பட்டு வந்தேன்.
குறித்த அமைப்பினால் மாத்தறையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டேன். இச்சந்தர்ப்பங்களின் போது நான் புலிகள் சார்பு அமைப்புக்களுடன் இணைந்து எதுவித தொடர்புகளையும் பேணாத போதும், குறித்த அமைப்புக்களினால் எனக்கெதிரான மிரட்டல் கடிதங்களும், விமர்சனங்களுமே எழுந்தன.
இந்நிலையில் அமைச்சர் குறித்த ஒப்பந்தம் தொடர்புடைய உண்மையை திரைமறைவிற்குள் கொண்டு செல்லும் நோக்கிலேயே என் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைக்கிறார்.
ஒரு வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும்.அத்துடன் இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்திய அமைச்சருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் நான் கலந்தாலோசித்து வருகிறேன் என்றார்.