மீண்டும் போரில் குதிக்கப்போகின்றாராம் மாவை! ஜனவரி அறிவிப்பிற்கு நடந்தது தெரியாது!!

உயர்பாதுகாப்பு வலயக்கோரிக்கைகளினை முன்வைத்து மீண்டும் போராடப்போவதாகத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவிப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கருத்து வெளியிடுகையில்:-
வல்லை அராலி பிரதான வீதியைத்திறந்து விட்ட இராணுவத்தினர், வீதியின் இரு மருங் கிலும் உள்ள காணிகளுக்குள் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை. பிரதான வீதியின் இருபுறமும், பொது மக்களின் சில வீடுகளிலும் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அவற்றுக்கு முன்பாக புதிதாக நிரந்தர பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, இராணுவ முகாம்கள் அமைக்கப்படாத வீடுகள் மற்றும் ஆலயங்கள் அடியோடு இடித்தழிக்கப்பட்டுள்ளன. வீதிகள் கூட அடையாளம் தெரியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வயாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட் பட்டமக்கள் வசிக்கும் பகுதிகளான ஒட்டகப்புலம், தோலகட்டி, வட மூலை ஆகிய பகுதிகளுக்குள் மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அந்த இடங்களுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் தடுத்துநிறுத்தியுள்ளனர்.
25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை வீட்டை காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு வெள்ளிக்கிழமை வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் கதறியழுதவாறு திரும்பியுள்ளனர்.
தமது சொந்த இடங்களில் மீள்குடி யேற வேண்டும் என்று கோரியே இந்த மைத்திரி அரசுக்கு ஜனாதி பதித்தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். ஆனால், இராணுவத் தைத் திருப்திப்படுத்தும் விதத்தில் தான் மீள்குடியேற்ற விடயத்தை அரசு கையாள்கின்றது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் அரசு மீள் குடியேற்ற வேண்டும். இல்லை யேல் சொந்த நில மீட்புக்கான தமிழரின் அஹிம்சைப் போர் வெடிக்கும். இதனை நாம் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேரில் சந்தித்துத் தெரிவிக்கவுள்ளோமென தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila