கொழும்பு சென்றுள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கிற்கு சென்றுள்ளார். பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு முதலில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிற்கு அவர் சென்றிருந்தார்.அங்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்திருந்தார்.
பின்னர் யாழில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் அரச ஆதரவு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களுடன் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.