அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மே 18 ஆம் திகதி 6 வது வருடம் நிறைவுபெற இருக்கிறது. இதையொட்டி புலம்பெயர் தமிழர்களுக்கும், தாய்த்தமிழர்களுக்கும், மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தினை பெரிய அளவில் அனுஷ்டிக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு. எனவே, இந்த தவறினை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலிகளை செலுத்த முன்வருமாறு அழைப்பு விடுத்தார். இவ்வாறு மிகப்பெரிய அளவில் முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை அனுஷ்டிப்பதன் ஊடாக தான் சர்வதேச சமூகத்திற்கு எமது அழிவிற்கு நீதி தேவை என்பதனை உணர்த்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். |
முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு வாரம் உணர்வுபூர்வமாக நினைவு கூர அழைப்பு!
Related Post:
Add Comments