தண்ணீர் கட்டணத்தில் இலட்சக்கணக்கான ரூபா மோசடி செய்த டக்ளஸ்! - அம்பலப்படுத்துகிறது சிங்கள ஊடகம்.

மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய பல லட்சம் ரூபா நீர் கட்டணத்தை செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, லேயாஸ் வீதியிலும் இரண்டு வீடுகள் உள்ளன.

இந்த வீடுகள் இரண்டுக்குமான தண்ணீர் கட்டணமாக 2010 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலுத்தப்பட வேண்டியிருந்தது. 10-13-856-135-14 என்ற புதிய கணக்கு இலக்கமாக மாற்றப்பட்டிருந்ததுடன் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய முழு கட்டணம் 1 கோடியே 19 இலட்சத்து 88 ஆயிரத்து 267 ரூபா 95 சதமாக அதிகரித்திருந்தது.
இந்தநிலையில், திடீரென அரசியல் அதிகாரம் ஒன்றினால் செலுத்த வேண்டிய இந்த கட்டணம் 7 இலட்சத்து 78 ஆயிரத்து 483 ரூபா 50 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. லேயாஸ் வீதி வீட்டின் தண்ணீர் கட்டணம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தண்ணீர் கட்டண கணக்கிற்கு அமைய 22 இலட்சத்து 38 ஆயிரத்து 694 ரூபா 76 சதமாக இருந்தது. அதுவும் அரசியல் தலையீட்டின் ஊடாக 10 லட்சமாக குறைக்கப்பட்டது.
இந் நடவடிக்கைகளின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் அமைச்சின் கீழ் இருந்தது.அத்துடன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக கருணாசேன ஹெட்டியாராச்சி என்பவர் பதவி வகித்தார். அவர் 6 நீர் வழங்கல் திட்டங்கள் ஊடாக 2 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்தவர் எனக் கூறப்படுகிறது. சிறையில் இருக்க வேண்டிய அவர், தற்போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளராக இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila