முன்னாள் ஜனாதிபதியை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு அதிகாரம் உள்ளதாக நீதியமைச்சர் ஏற்கனவே வெளியிட்டிருந்த கருத்து பின்வாங்கப்பட்டதை சாபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதியின் மதிப்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைக்கு நியாயமான பதில் கிடைத்துள்ளதால், நேற்றுமுற்பகல் முதல் மேற்கொண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.