இந்தநிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் இல்லாமையினால் அந்தக் கூட்டம் 8ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டம் கடந்த 27ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அன்றைய தினம் நடைபெறாமல் 29ம் திகதி இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய தினமும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்தக் கூட்டம் இடம்பெறவில்லை. எனவும் அது பின்னர் 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னதாக இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் போது இதுவரை 825 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கு பதிவு செய்துள்ளதாகவும் அவர்களுக்கான 13ஆயிரம் ரூபா பணம் மற்றும் காணிகள் துப்புரவு செய்தமைக்கான நிதி உள்ளிட்ட நிதிகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு அனுமதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரை நிரந்தர வீடுகள் வழங்குவது தொடர்பாக, முதற்கட்டமாக 75 அரைநிரந்த வீடுகள் வழங்கப்படவுள்ளதாகவும், தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தினால் மீள்குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் படையினர் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் என சகல தரப்பினரும் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.