இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாட்டினது எதிர்காலம் கருதியே நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்படவேண்டுமே தவிர, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஆட்சிக்கவிழ்ப்பிற்காக வெளியில் இருந்து கொண்டு செயற்படும் ஒரு சில குள்ளநரிகளின் செயற்பாடுகளே இந்த பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்.
மேலும் எமது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின்படி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படமுடியாது என்பதுடன் அதற்கான சட்டவிதிமுறைகளும் இல்லை.
எனவே இது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானமாகவே பார்க்கப்படவேண்டும். குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் இறுதியில் இவ்விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.