அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,.. விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள் என்று மட்டும் நின்றுவிடாது விளையாட்டுகளூடாக தமிழர்களின் பண்பாடு, கலை கலாசார விழுமியங்களை சமூகத்தோடு இணைத்து செயற்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் மோசமான ஒரு நிலைக்கு இன்றைய இளைய சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.இது திட்டமிட்ட செயலாகவே உள்ளதாக எண்ணக்கூடியதாக உள்ளது. போதைவஸ்துப் பாவனைகள் கலாசார சீரழிவுக்கு இட்டுச் செல்கிறது. இன்றைய இளைய சமுதாயம் தமிழரின் பாரம்பரிய செயல்களை மற்றும் கடந்த கால வரலாறுகளை நினைத்து பார்க்க வேண்டும். இன்றைய சூழல் ஏன் இவ்வாறு உள்ளது, யாரால் உருவாக்கப்படுகிறது என்று அவதானம் செலுத்த வேண்டும். வெறும் உணர்ச்சி பேச்சுகளுடன் நாம் நிற்காது எமது தேசியம், சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளுடன் தமிழ் இன அடையாளத்துடன் நாம் வாழ எதிர்காலம் உருவாக ஒன்றுபட வேண்டும். இந் நிகழ்வானது மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சுகிர்தனுடைய நிதி ஒதுக்கீடாகும். எனது நிதி ஒதுக்கீட்டை பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்காக கொண்டே ஒதுக்கீடு செய்துள்ளேன். போரின் காரணமாக பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த வண்ணம் உள்ளார்கள். அத்தகையவர்களை அடையாளம் கண்டு உதவும் மகளிர் சங்கங்களுக்கு எனது ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் ஓரளவு எமது பொருளாதார மேம்பாட்டை அடையலாம் என்ற காரணத்தால் அவர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். |
தமிழன் என்ற அடையாளத்தை பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்: - அனந்தி சசிதரன்
Related Post:
Add Comments