மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர்.
மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அதில் சிலர் நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசினர். இதனால் அங்கு மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
குழப்பம் விளைவித்த 20 பேர் கைது
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் கைதான சந்தேகநபர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதையடுத்து, அங்கு கூடியவர்கள் நீதிமன்றத்துக்கு கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியதுடன், பொலிஸாரின் பாதுகாப்பு வேலியையும் தாண்டி நீதிமன்றத்துக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
கல்வீச்சில் நீதிமன்ற கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 3 வாகனங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி குழப்பம் விளைவித்தவர்களைக் கலைத்தனர். அதன்பின்னரும் அங்கு நின்று குழப்பம் விளைவித்த சுமார் 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
எனினும், உத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தொடர்பான விவரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு நுழையும் சகல பாதைகளும் மூடப்பட்டு, பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட 107 பேர் கைது
யாழ். நீதிமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் மதியம் 50 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மீட்கவந்த மேலும் 57 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- யாழ்.நீதிமன்ற சுற்றாடலில் நடந்தது என்ன?
- வித்தியா மீதொரு சத்தியம் செய்யுங்கள் மாணவர்களே !
- அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றம்!
- மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
- யாழ்ப்பாண ஆர்ப்பாட்டம் சிங்களவர்களுக்கு எதிரானது அல்ல: சுமந்திரன்
- புங்குடுதீவு மாணவிக்கான நீதி போராட்டத்தை வன்முறையாக்கியது யார்? கூட்டமைப்பு கண்டனம்
- புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் ஒரு தமிழனாக வெட்கி தலை குனிகிறேன்!- மனோ கணேசன்
- அரக்கத்தனமான வெறியாட்டத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!- புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி
- படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நீதி வழங்கக்கோரி முஸ்லீம்கள் பேரணி
- வித்தியாவின் கொலையை கண்டித்து கிளிநொச்சி தர்மபுரத்தில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்!
- மாணவி வித்தியா படுகொலை! அனைத்து பாடசாலைகளும் போராட்டத்தில்!
- யாழ். நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் - அதிரடி படையினர் குவிப்பு - நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட 107 பேர் கைது
- மாணவி படுகொலை - யாழில் அனைத்து அமைப்புக்களும் போராட்டத்தில் குதிப்பு
- டில்லியில் நடந்த கொடூரமும் புங்குடுதீவில் நடந்த நெட்டூரமும்
- வித்தியாவின் வழக்கில் ஆஜராகிறார் மூத்த சட்டத்தரணி கே.வி தவராஜா