யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
அதன்போது மாவட்ட செயலகத்தினால் போதைப்பொருட்களை விற்கும் இடங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்ததுடன் அவற்றை பொலிஸாரிடம் கையளித்து விட்டதாகவும் தெரிவித்தார். அது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் .
அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவட்ட செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பில் நான் பதில் எதனையும் கூறமுடியாது. அதனை அரச அதிபரே கூறவேண்டும்.
எனினும் குறித்த அறிக்கை எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை . அவ்வாறு கிடைக்குமிடத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை ஏற்கனவே வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தான் கையளித்து விட்டதாக அரச அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.