முன்னைய காலங்களில் அரசாங்கம் வேறு நாங்கள் வேறு என்ற சிந்தனை எம் மத்தியில் இருந்து வந்தது. இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றிய 200 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பதவியில் இருந்தும் நியமனம் வழங்கப்படாத காரணத்தால் நிரந்தரம் இல்லாமல் இருந்தீர்கள். உங்களுக்கான நியமனங்களை வழ ங்கி உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துள்ளோம்.
நியமனம் கிடைத்ததுடன் நீங்கள் அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இணைந்துள்ளீர்கள். ஆகவே அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறும் மக்களில் நீங்களும் ஒருவர். முன்னைய காலங்களில் அரசாங்கத்துக்குரியதை நாம் எதுவென்றாலும் செய்யலாம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டுடன் இருந்தது போல் இனிவரும் காலங்களில் எவரும் செயற்படக்கூடாது.
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் காலத்தில் அரச வேலையில் இருப்பவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். அன்றைய நாட்களில் தகைமை அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட்டன.
பின்னர் எங்களை நாங்களே ஆள்வதற்கு வந்த பின்னர் அரசியல் படிப்படியாக எமக்குள் புகுந்தது. அரசியல்வாதிகள் தமக்கு தேவையானவர்களை அரச நியமனத்துக்குள் உட்படுத்த வேண்டும் என்று நினைத்தார்களே தவிர தகைமைகள் இருப்பவர்களை அந்தந்த தகுதிகளுக்குள் உள்வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இதன் காரணத்தால் பல பிரச்சினைகள் உருவாகின.
அந்த வகையில்,தகைமை இல்லாதவர்கள் ஒரு பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டியுள்ளதும், தமக்கு அந்த பதவியை தந்த அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற கடப்பாடு அவர்களுக்கு இருந்து வந்தது.
அவ்வாறான நிலைமைகளை நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் உணர்ந்து புரிந்து கொண்டோம்.
இதில் தனிப்பட்ட ஒருவரை குற்றம் கூறுவதில் எந்த பயனும் இல்லை. அவர்கள் பாரிய ஒரு செயற்றிட்டத்துக்குள் அகப்பட்டுள்ளவர்கள். ஆகவே மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுவதோடு அவர்களுடைய சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஏதோ ஒரு கட்சி உங்களுக்கு வேலையை பெற்றுதந்துள்ளது என்பதற்காக சில வருடங்களாக வேலை செய்பவர்களை வேலையிலிருந்து நிறுத்துவது பிழையான செயல் என்றே நாம் கருதுகின்றோம்.
இந்த நியமனங்கள் தொடர்பாக கடந்த வருடம் முன்னைய ஜனாதிபதியிடமும் கூறியிருந்தேன். அவர் விரைவான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியிருந்தார்.எது எவ்வாறாக இருப்பினும் உங்களது சேவைக்காலங்களை கருத்தில் கொண்டு உங்களுக்கு நியமனம் வழங்கியுள்ளோம்.
நாங்கள் எங்களை ஆளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் நாங்கள் அரசுடன் இணைந்து வெளிப்படை தன்மையுடன் சகல நன்மைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்து ஊழல் அற்ற முறையில் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.