பவித்ரா அமைச்சு பதவியை துறக்க காரணம் என்ன? மோசடி அம்பலம்

சட்டவிரோதமாக நடாத்திச் சென்ற பாரிய அளவிலான இரத்தினக்கல் சுரங்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு காரணமாகவே பவித்ரா வன்னியாரச்சி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தை அண்டிய பகுதியிலே இவ்விரத்தினக்கல் சுரங்கம் நடத்தி செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார அதிகாரிகள், குருவிட்ட இராணுவ முகாம் படை வீரர்கள் மற்றும் காவற்துறையின் ஆதரவுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது 24 பேர் கைது செய்யப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மூலம் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சுரங்கம் தோண்டுவதற்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரம் மற்றும் மாணிக்கக்கற்கள் அகழும் இயந்திரங்கள் வழக்கு பொருட்களாக கைப்பற்றப்பட்டுள்ளன.
அப்பொருட்களை விடுவிக்குமாறு பவித்ரா வன்னியாரச்சி இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு வலியுறுத்துவதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா தன் அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தற்போது தகவல் கசிந்துள்ளது.
முன்னாள் அமைச்சர், பிரபலமான பிறிதொரு பெண்ணுடன் இணைந்து கொண்டு சட்டவிரோத வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
அமைச்சு பதவியை இராஜினாமா செய்துகொண்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதாக கூறி மீண்டும் தனது வீட்டை பந்தயத்திற்கு வைப்பதற்கு ஆயத்தமாக உள்ளேன் என கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila