மேயர் தலைமையிலான குழுவுக்கும் எதிர்க்கட்சி தலைவரின் தலைமையிலான குழுவுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
கோட்டே மாநகரசபை பிரதேசத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது தம்மீது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேயர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான சுகத் அப்புஹாமி பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
மாநகரசபைக்கான புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி அப்புஹாமி அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.
இதன்போதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான அப்புஹாமி நிலத்தில் வீழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.