பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமையும் : சி.வி
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணித் தெரிவில், ஓமந்தையில் அந்த மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உடல்நலம் பாதிப்பு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார். இதன்போது, பொருளாதார மத்திய நிலையக் காணிப்பிரச்சினைத் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் தொலைபேசியூடாக ஆதவன் செய்திக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசினோம். நன்மைகள், தீமைகள் தொடர்பாகவும் பேசினோம். தம்பி மாவை அவர்கள் குறித்த காணிகளை பார்வையிட்டிருக்கின்றார். ஓமந்ததையில் மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார ரசபையின் முடிவு பெறப்படவேண்டும் எனஇந்தச் சந்திப்பில் என்னிடம் கூறியிருக்கின்றார். ஆனால் அவ்வாறில்லை. இது கிராமப்புறம் இங்கே அவர்களுடைய முடிவு தேவையில்லை. அவ்வாறிருந்தாலும் 2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சகல அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்கள். காணியை
உடனடியாக எடுக்க கூடிய நிலையில் இருக்கின்றது. எனவே நாங்கள் இந்த விடயத்தில் உறுப்பினர்களின் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கின்றோம். இதில் அனேகமாக ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமையும் சாத்தியம் உள்ளது’ என்றும் கூறினார்.
Related Post:
Add Comments