தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் ஆடம்பரக் ஹோட்டல்கள்!

இலங்கையில் தமிழர்களிடமிருந்து கைப்பற்றிய நிலங்களில் ஆடம்பர ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தளபாடங்களாக மறுவுருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப்புலிகளுக்கு இடையே 26 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

(35வது நிமிடத்திலிருந்து வடக்கு முதல்வரின் பேச்சைக் கேட்கலாம்)
இதில் 10,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போர் நிறைவடைந்து 6 ஆண்டுகள்  கடந்த நிலையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்கள் மீதாக தாக்குதல் இன்றும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு நடத்திவரும் கலிபோர்னியாவில் உள்ள ஒக்லாந்து நிறுவனத்தின் இயக்குனரான அனுராதா மிட்டல் கூறுகையில்,
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் இன்று தொடர்வதாகவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வீடு இல்லாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், போரின்போது அவர்களிடம் இருந்து கைப்பற்றபட்ட அவர்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆடம்பர ஹொட்டல்கள், புதிய நிறுவனங்கள் மற்றும் இராணுவ தளவாடங்கள் என்று மறுவுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக எந்த வழியும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் இலங்கையில் தமிழர்களின் சுகாதாரமற்ற மற்றும் அடிப்படை வசதிகள் அற்ற பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர் என்றும் அவர்கள் மீண்டும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று ஒட்டாவாவில் உள்ள இலங்கையின் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் அதன் தூதரக தலைவர் வருனா வில்பாதா கூறுகையில், இலங்கையின் வடபகுதியில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இராணுவம் கடந்த 2014 ஜூன் மாதமே ஒப்படைத்துவிட்டது.
அங்குள்ள பெரும்பாலான நிலங்களில் கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் தமிழர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
இலங்கையில் இருந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்ந ஆய்வில் நிலம் ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்றும் பெரும்பாண்மையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆண்டின் கணக்குப்படி ஆறு தமிழர்களுக்கு ஒருவர் என்ற நிலையில் அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனும் இங்கு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. (மேல் இணைக்கப்பட்ட ஒலிப்பதிவில் 35வது நிமிடத்திலிருந்து அவரது பேச்சைக் கேட்கலாம்)

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila