பசிலின் மனைவிக்கு வந்த சோதனை

கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற துறைமுகம் நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட சீனா நிறுவனத்தினால் 600 மில்லியன் ரூபாய் புஷ்பா ராஜபக்ச என்ற அறக்கட்டளையின் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் கீழ் குறித்த அறக்கட்டளை இயங்கப்பட்டுள்ளது.
துறைமுகம் நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியின் பொறுப்பாளரான Colombo International Container Terminal என்ற நிறுவனம் ஒரே காசோலையில் நேரடியாக குறித்த 600 மில்லியன் பணத்தை புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளை வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளனர்.
குறித்த நிறுவனம் அறக்கட்டளையாக  நிறுவப்பட்டிருந்தாலும், அதனை உருவாக்கியவர்கள்  அந்த அறக்கட்டளையின் பணத்தினை தனிப்பட்ட முறையில் மாத்திரம் பயன்படுத்துவதாக நிதி குற்றப் புலனாய்வு பிரிவு உறுதி செய்துள்ளது.
அவ் சீன நிறுவனத்திற்குரிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பின்னாள், முன்னாள் அரசியல் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சீனா நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் போது குறித்த அரசியல் முக்கியஸ்தர் அவரது நிறுவனத்திற்கு சேர வேண்டிய 600 மில்லியன் தரகு பணத்தினை நேரடியாக பெற்றுக்கொள்ளாமல் புஷ்பா அறிக்கட்டளை கணக்கில் வைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவல்கள் உறுதியாக்கப்பட்ட பின்னர் இவ் ஊழல் மோசடியில் தொடர்புடையவர் குற்றபுலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila