யாழ்ப்பாணத்தில் நான்கு பேருக்கு ஒரு இராணுவம் விகிதம் நிறுத்தப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்து குறித்து யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவிடம் யாழ் பாலாலிக்கு அழைக்கப்பட்ட ஊடகவியர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியை ஊடவியலாளர்கள் எழுப்பியபோது பதில் கூறாமல் தடுமாறிய யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த சற்று நேரம் பதில் எதுவும் கூறாமல் இருந்தார். பின்னர் சிரித்தார்.
பின்னர் எல்லா விடயங்களையும் ஊடகங்களுக்கு கூற முடியாது என தெரிவித்த இராணுவம் சில விடயங்களை பாதுகாப்புக் கருதி அங்கு தெரிவிக்க முடியாது என்றார். அத்துடன் இது அரசியல் என்ற காரணத்தினால் இதை அமைச்சரவை பேச்சாளரிடம் வினவுமாறும் இராணுவம் கூறியது.