மரணதண்டனை குறித்த விவாதங்கள் இலங்கையில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்திய உரை மட்டும் காரணம் அல்ல, புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரமும் கூட ஒரு காரணம் தான்.
கொடூரமான குற்றச்செயல்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இலங்கையில் இப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் நாட்டில் அதிகரித்துள்ள குற்றச் செயல்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.
குற்றச்செயல்களின் கொடூரத்தன்மையும், அவற்றின் பாதிப்புகளும், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதன்மூலம், இவற்றைக் குறைக்கலாம் என்ற ஆதங்கத்தை பெரும்பாலானோரிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில், கடந்த நான்கு தசாப்தங்களாக மரணதண்டனை எவருக்கும் நிறைவேற்றப்படவில்லை. இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி, நீதிமன்றங்கள் மரணதண்டனையை விதிக்கின்ற போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
கடைசியாக 1976 ஆம் ஆண்டே இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பின்னர், மரணதண்டனை பெற்றவர்கள், ஆயுட்காலம் முழுவதையும் சிறையில் கழிக்கும் நடைமுறையே இருந்து வருகிறது. அதிகபட்சமான குற்றங்களுக்கே மரணதண்டனை விதிக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகள் மரணதண்டனையை சட்டத்திலிருந்து நீக்காவிடினும், நீதிமன்றங்கள் மரண தண்டனையை கொடுப் பதை முடிந்தவரை தவிர்த்து வருகின்றன. எனினும், இலங்கையில் நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்படும் சம்பவங்கள் அதிகமாகவே இடம்பெறுகின்றன.
மிக சமீபத்தில், தனது மேலதிகாரியான இராணுவ கப்டன் ஒருவரை பலாலி படைத் தளத்துக்குள் வைத்து சுட்டுக்கொன்ற லெப்டினன்ட் தர அதிகாரிக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இதுபோன்ற பல தீர்ப்புகள் அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பதால், இந்த தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற பிரசாரங்கள், ஏனைய நாடுகளில் இடம்பெறுவதைப் போன்று அவ்வளவாக சூடுபிடித்திருக்கவில்லை.
எனினும், தற்போது மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளதைப் போலவே, அவ்வப்போது அதற்கெதிரான குரல்களும் இலங்கையில் எழுந்திருக்கின்றன.
சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ரிஸானா சிரச்சேதம் செய்யப்பட்ட போது, மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதுபோலவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தையடுத்து, தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட போது, அதற்கெதிராக கடுமையான குரல்கள் எழுந்தன.
மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகையதொரு தண்டனை முறையே உலகில் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஊடகங்களில் அதுபற்றிய பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெற்றன. மிக அண்மையில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மயூரன் என்ற இலங்கை வம்சாவளி இளைஞருக்கு இந்தோனேஷியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட போதும், கடுமையான அதிர்வலைகள் உணரப்பட்டன.
இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் தண்டனையை எதிர்கொண்டவர்கள் தமிழ் பேசுவோர் என்ற உணர்வு மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ரிஸானாவுக்கும், மயூரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்ட கொடூரமான முறையே, இந்த தண்டனைக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.ஆனால், அதேநேரத்தில், புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி கூட்டு வன்புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறிய போது, குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்ற கோஷம் மேலோங்கியது.
யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் நடந்த போராட்டங்களின் போது, வித்தியா படுகொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மக்கள் ஆவேசப்பட்டனர்.
ஒருசில இடங்களில் பகிரங்கமாக அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ரிஸானா, மயூரனின் மரணங்களின் போது, மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் மக்களைக்கூட வித்தியாவுக்கு நிகழ்ந்த கொடூரம், மரணதண்டனைக்கு ஆதரவானவர்களாக மாற்றிவிட்டது ஆச்சரியம்.
குற்றங்களின் கொடூரத்தன்மையே, சிலவேளைகளில் இத்தகைய தடுமாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
வித்தியா கொலையாளிகளுக்கு உச்சமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் இங்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், அது மரணதண்டனையாகத் தான் அமைய வேண்டும் என்று எதிர் பார்த்தால், அது சிலவேளைகளில் ரிஸானா, மயூரன் மரணங்களின்போது, அனுபவித்த துயரங்கள் தொடர்வதற்கும் காரணமாகி விடும் என்பதை மறுக்க முடியாது.
கடுமையான தண்டனைகள் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அல்லது இல்லாமலே செய்துவிடும் என்ற கருத்து ஆதிகாலம் தொட்டு மனிதனிடமிருந்து வருகிறது. அதனால்தான் கொடூரமான மரணதண்டனை உள்ளிட்ட பல தண்டனை முறைகள் வகுக்கப்பட்டன.
இவற்றில் தலையை சீவுதல், கையை வெட்டுதல், கண்ணை சேதப்படுத்தி பார்வையிழக்கச் செய்தல் போன்றவை மட்டுமன்றி, வல்லுறவுக் குற்றவாளிகளின் ஆண் உறுப்பை சிதைத்தல் உள்ளிட்டவையும் அடங்கும்.
அண்மையில் வித்தியா படுகொலைக்குப் பின்னர், வடக்கில் விடுதலைப் புலிகளின் காலத்தில், இத்தகைய குற்றங்கள் நிகழ்ந்திருக்கவில்லை என்றும், நள்ளிரவில்கூட வீதியில் செல்லும் அளவுக்கு பெண்களுக்குப் பாதுகாப்பான நிலை இருந்ததாகவும் அரசாங்கத்திலிருக்கும் அரசியல்வாதிகள்கூட பெருமைப்பட்டுக் கொண்டனர்.
அவர்கள் அதைமட்டும் கூறவில்லை- புலிகளின் காலத்தில் இருந்த மரணதண்டனை போன்ற கடுமையான தண்டனை முறையினால்தான், அவ்வாறான பாதுகாப்புக் கிடைத்ததாகவும் குறிப்பிட்டனர்.
விடுதலைப் புலிகள் வன்புணர்வுக் குற்றவாளிகள் போன்றவர்களை கடுமையாக தண்டித்தனர் என்பது உண்மையே. ஆரம்ப காலங்களில் சிலர் பகிரங்கமாக பொதுமக்கள் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டு தண்டிக்கப்பட்டதும் உண்மையே.
ஆனால் பின்னர் அவர்களும் மனித உரிமைச் சட்டங்களுக்கும் சர்வதேச அழுத்தங்களுக்கும் கட்டுப்பட்டு, தமது தண்டனை முறைகளில் மாற்றங்களைச் செய்தனர் என்பது பலருக்குத் தெரியாத விடயம்.
கடுமையான குற்றங்களுக்கு நீதிமன்ற த்தின்மூலம் தண்டனை வழங்கும் முறையே புலிகளாலும் கடைப்பிடிக்கப்பட்டது.
வித்தியா கொலைக்குப் பின்னர், புலிகளின் காலத்தைச் சுட்டிக்காட்டி பெருமை பேசியவர்கள், இன்னொரு வகையில் அவர்களின் பகிரங்க மரணதண்டனையைத் தான் நியாயப்படுத்தினரே தவிர, நீதிமன்ற ங்களின்மூலம் மட்டுமே புலிகளால் பிற்காலத்தில் நீதிபரிபாலனம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்தவில்லை.
விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தை வைத்து, பொதுமக்கள்முன் பகிரங்கமாக மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற யதார்த்தமற்ற கோரிக்கைகளை இப்போது நியாயப்படுத்த முனைந்தனர்.
கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய இடங்களிலும் எழுந்திருந்த நிலையில்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்திருக்கிறார்.
போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஒரு விவாதமாக தொடக்கி வைத்திருக்கிறார். போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் அந்தக் கருத்தை முன்வைத்திருந்தார்.
முன்னதாக, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும் கடுமையான குற்றங்களை ஒழிப்பதற்கு மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொனிப்பட கருத்துக் கூறியிருந்தார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை போதைப்பொருள் விற்பனையாளருக்கு மரணதண்டனையை விதிக்க வேண்டும் என்ற கருத்து ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள தருணத்தில், ஏனைய கடுமையான குற்றங்கள் குறித்து அவர் பேசவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
போர்க்காலத்தில் இடம்பெற்ற மோசமான மீறல்கள் குறித்த விசாரணைகள் உள் நாட்டில் நடத்தப்படும் என்று வாக்குறுதி அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள சூழலில், அரசாங்கம் மரணதண்டனையை போதைப்பொருள் விற்பனையாளருக்கு என்று மட்டுப்படுத்த முனைகிறதா என்ற கேள்வியும் உள்ளது.
உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனைகள் கூட விதிக்கப்படலாம்.அத்தகையவர்களை காப்பாற்றும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்ள முற்படுகிறதா என்ற கேள்வியும் உள்ளது.
எவ்வாறாயினும், மரணதண்டனை என்பது இன்றைய உலகில் அருவருக்கத் தக்க ஒன்றாக- மனித குலத்துக்கு எதிரான ஒன்றாகவே மனித உரிமை அமைப்புகளால் கருதப்படுகிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்கள் முடிவற்று நீள்கின்றன.
இந்தநிலையில் இலங்கையிலும் குற்றச செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், கொடூரமான குற்றவாளிகளை அதிகபட்ச தண்டனைக்குட்படுத்துவதன் மூலம் குற்றங்களைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கத்தில் கடுமையான, கொடூரமான தண்டனைகள் மட்டுமே, குற்றங்களை தடுக்காது என்ற கருத்தும் உள்ளது.உதாரணத்துக்கு இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் மிகக்கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், அங்கு குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று கூற முடியாது.
தனியே தண்டனைகள் மட்டும் தான் குற்றங்களை குறைப்பதில்லை. சமூக கட்டுப்பாடுகளும், பிணைப்பும்கூட அவற்றைக் கட்டுப்படுத்தும்.விடுதலைப் புலிகளின் காலத்தில் குற்றச் செயல்கள் குறைந்திருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.
போர் நடந்த காலத்தில், சமூகத்தில் ஒற்றுமையும், பிணைப்புகளும், சமூக கட்டுப்பாடுகளும் அதிகமாகவே கடைப் பிடிக்கப்பட்டன.
புலிகளின் நிர்வாக முறைமைகளும் அதற்கு மற்றொரு காரணமாய் அமைந்திருந்தது.அது பலருக்குப் புரியாததால்தான், புலிகளின் கடுமையான தண்டனைகளே, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதான கருத்தை அவர்களிடத்தில் ஊன்றச் செய்துள்ளது.