அமெரிக்க சரித்திரத்தில் நான் இடம் பிடிப்பேன் ஹிலாரியின் அனல் பறக்கும் பிரசாரம்


2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதவாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஹிலாரி கிளிண்டன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் ஆளும் ஜனநாயக கட்சியில் முக்கிய தலைவராகவுள்ளார்.

கடந்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அவர், ஒபாமாவிடம் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளர்.

தற்போது, அதற்கான தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ரூஸ் வெல்ட் தீவிலிருந்து (Roosevelt Island) தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய அவர், இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் இறங்கியுள்ளேன், என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்தால், அமெரிக்க மக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், நாட்டின் தேசிய பொருளா தாரத்தை நடுத்தரவர்க்கத்தினரும் அனுபவிக்கும் அளவுக்கு மாற்றியமைப்பேன் என்று கூறியுள்ளார்.

எனக்கு இளம் வயது இல்லை என்றாலும், அமெரிக்காவின் புதிய பெண் என்ற சரித்திரத்தில் எனது பெயர் இடம்பெறும். பாட்டி ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவானார் என்பது பெருமைக்குரிய விடயம் என்று ஹிலாரி தெரிவித்துள்ளார்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila