கொலையாளி பிள்ளையானிற்கு விடுதலை:களத்தில் எடுபிடிகள்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஆட்கடத்தல்கள்,கொலைகளின் மைய சூத்திரதாரியுமான கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இனை விடுவிக்க கோரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பிள்ளையான் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகப் பாதையில் சுயமாக ஈடுபட வழிவிடுமாறு கோரி, அடையாள உண்ணாவிதரப் போராட்டமொன்று, இன்று (25) இடம்பெறுவதாக பிள்ளையானின் எடுபிடிகளாக இருந்த சிலர் பரப்பரைகளை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரப் போரட்டத்தில் பிள்ளையான் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உப தலைவர் நா.திரவியம், கட்சியிருந்து உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2005ஆம் ஆண்டு, மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான “பிரதீப் மாஸ்டர்” என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, “கஜன் மாமா” எனப்படும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர்;  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனது ஆதரவு ஊடக எடுபிடிகள் சகிதம் பிள்ளையான் குழு இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.வெறும் 20 பேர் வரையில் கலந்து கொண்ட உண்ணாவிரதத்தை ஊதிப்பெருப்பிக்க குறித்த ஊடக எடுபிடிகள் முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila