யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்படி கூட்டம் நடைபெற்றிருந்தது. கூட்டத்திற்கு முன்னதாகவே, ஊடகவியலாளர்களை சபையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என யாழ்.அரசாங்க அதிபர் என். வேதநாயகன் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரிடம் கூறினார். இந்நிலையில் கூட்டம் ஆரம்பித்தவுடன் அரசாங்க அதிபர் ஒலிவாங்கியில் ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு அறிவித்தார். இதன் பின்னர் அமைச்சர் கூறுகையில், இந்தக் கூட்டம் மீள்குடியேற்றம் தொடர்பாகவும், மீள்குடியேறிய மக்களின் தேவைகள் தொடர்பாக கண்டறிவதற்குமானது என கூறியிருந்தார். பின்னர் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஒலிவாங்கியை வாங்கி இந்தக் கூட்டம் ஒரு அதிகாரிகளுக்கிடையிலான கூட்டம். இரகசியமான கூட்டம் என கூறியதுடன் சபையிலிருந்து வெளியேறுமாறு கூறினார். இதனையடுத்து எதற்காக வெளியேறுமாறு பணிக்கப்படுகின்றது? அமைச்சர் சொல்வது சரியா? அமைச்சு செயலாளர் சொல்வது சரியா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கையை உயர்த்தி கூட்டம் முடிந்தவுடன் சொல்கிறோம் வெளியே நில்லுங்கள் என கூறினார். இதனையடுத்து ஊடகவியலாளர்கள் அலுவலகங்களுக்கு திரும்பினர். |
யாழ். செயலக கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்!
Related Post:
Add Comments