உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த பாடசாலை இடிக்கப்பட்டு அவ்விடத்தில் புதிய படை முகாம் ஒன்றினை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
வசாவிளான் ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையே இவ்வாறு இடிக்கப்பட்டு படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் தமது காணிகளினை சென்று பார்வையிட்டுவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போதே குறித்த பாடசாலை படைமுகாமாக மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றபோது குறித்த பாடசாலை 100 தொடக்கம் 150 மாணவர்களினை கொண்டு அதிபர் சூசைப்பிள்ளை தலைமையில் இயங்கி வந்துள்ளது.
இடப் பெயர்வின் பின்னர் கடந்த இரு வருடங்களிற்கு முன்னரும் குறித்த பாடசாலைக் கட்டடம் அப்படியே இருந்ததாக கட்டடத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது குறித்த பாடசாலைக் கட்டடத்தின் பின்பகுதி உடைக்கப்பட்டு முன்பகுதியினை இராணுவம் படை முகாமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கஜபாகு றெஜிமன்ட் என பெயரிடப்பட்டு குறித்த பாடசாலையினை இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் பாடசாலைக்கு முன்பாகவுள்ள அமல உற்பவ மாதா ஆலயத்தினை சூழ முட்கம்பிகள் வரியப்பட்டு உள்ளே கற்களினால் அடையாளப்படுத்தப்பட்டும் உள்ளன.
மேலும் சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்களில் புத்த சிலைகளினையும் இராணுவத்தினர் வைத்துள்ளனர்.
இதேபோல் இலங்கையிலேயே பெயர் பெற்ற ஒட்டப்புலம் சமத்தர் செல்லத்துரையின் முறிவு நெறிவு வைத்தியசாலையும் இராணுவத்தினர் வசம் தற்போது உள்ளது.
இவ் உருவ மறைப்புக்கள் அழிப்புக்களினை பார்வையிட்ட மக்கள் கண்ணீருடன் எங்களுக்கு விட்டிவே இல்லையா? என ஊடகங்களிடம் தெரிவித்தனர்.