
ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27) சாவகச்சேரி கண்டிவீதியில் இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப் புலிகள்தான் அவருக்கு இடம்கொடுத்தவர்கள். ஒருவரையும் தோர்தலில் ஈடுபட வேண்டாம் என்று கூறிவிட்டு ஏழு வாக்குகளால் டக்ளஸ் அரசியலுக்கு வருவதற்கு அவர்களே காரணமாக இருந்தார்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.