குறித்த வேட்பாளர் நியமனம் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் எனவும், அதன் பின்னர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர். அதேவேளை, நான்கு கட்சிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு, இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை சட்டரீதியான முறையில், முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் ஏனையவர்கள் இணைந்து லண்டனில் நடாத்திய பேச்சுவார்த்தை குறித்து இரகசியங்கள் எதுவும் கட்சிக்குள் இருக்கக் கூடாது அவற்றினை கட்சியின் ஏனையோருக்கும் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்தி, லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கட்சியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு கலந்துரையாடலில் யாரை கலந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவர் தெரிவிக்கின்றாரோ, அவர் அந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில் எந்த வித பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த கலந்துரையாடலில் கதைக்கப்பட்ட விடயத்தினை கட்சியில் உள்ள ஏனையவர்களுக்கு மறைப்பது ஆரோக்கியமான முடிவல்ல என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். அதனடிப்படையில், அங்கு என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்ற விடயத்தினை எந்த கட்சியில் இருக்கும் ஏனையோருக்கு நம்பிக்கை இல்லாமல் தெரியப்படுத்தாமல் மறைப்பது கட்சியில் உள்ள ஏனைய கட்சிக்குள் சுமூகமான நிலைப்பாடாக இருக்க முடியாது.எனவே, கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில், எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க கூடாதென்றால், அனைத்து கட்சிக்குள்ளும் உண்மையான விடயங்களை பகிர்ந்து கொள்வது நல்லதென்றும், அங்கு கதைக்கப்பட்ட விடயங்களை மறைக்காது தெரியப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், மற்றும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், புளொட் சித்தார்த்தன், சதானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். |
பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!
Add Comments