ஜனாதிபதியும் பிரதமரும் எம்மை ஏமாற்றி விட்டார்கள் - கூறுகிறார் மாவை சேனாதிராஜா

ஜனாதிபதியும் பிரதமரும் எம்மை ஏமாற்றி விட்டார்கள் - கூறுகிறார் மாவை சேனாதிராஜா:-


ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. எம்மை அவர்கள் ஏமாற்றி விட்டார்கள். அது தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்ற கூடும் வேளையில் அவர்களுடன் பேசி ஒரு முடிவை எட்ட உள்ளோம். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் யாழ்.மார்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு தமிழ் மக்கள் இந்த ஆட்சியை மாற்ற வாக்கு அளித்த பின்னர் உடனடியாக அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தோம்

இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அவற்றை அதன் உரிமையாளருக்கு வழங்க வேணும் அவர்கள் மீள்குடியேற்ற பட வேண்டும் என நாங்கள் பேசி தேர்தல் அறிக்கையில் நூறு நாள் திட்டத்தில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டு வாக்குறுதி தரப்பட்டது போல அந்த நிலங்கள் விடுவிக்கப்படவில்லை

ஆயிரம் ஏக்கர் நிலத்தை வலி வடக்கில் விடுவித்து மீள் குடியேற்றம் செய்வோம் என ஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி என எல்லோரும் வந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு அந்த காணி சான்றிதழ்கள் வழங்கும் போதும், எந்த மக்களிடம் இருந்து காணிகள் அபகரிக்கப்பட்டதோ அந்த காணிகளை அந்த மக்களிடமே மீள் கையளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்கள்.

வாக்குறுதி அளித்தபடி  ஆரம்பத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கபப்டும் என அறிவித்து இருந்தார்கள் வளலாயில் மற்றும்  வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததில் ஒரு பகுதி  நிலம் விடுவிக்கப்பட்டது.

வலி வடக்கில் 564 ஏக்கர் காணி தான் விடுவிக்கப்பட்டுள்ளது வளலாயில் ஒரு பகுதி 437 ஏக்கர் நிலம் விடுவிக்கபப்ட்டுள்ளது. வளலாயில் விடுவிக்கப்படும் என முன்னைய அரசாங்கம் விடுவிப்பதாக கூறிய நிலத்தையே தற்போதைய அரசாங்கம் விடுவித்தது. இன்னமும் 403 ஏக்கர் காணி விடுவிக்கபப்டவில்லை

வலி.வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் நிலத்தில் 564 ஏக்கர் நிலம் மட்டுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஆறு மாத காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது


விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள் குடியேறிய மக்கள் அந்த காணிகளை துப்பரவு செய்யவோ வேறு உதவிகளை செய்வோ நிதி இல்லை என மீள் குடியேற்ற அரசு சொல்லி இருக்கின்றது

அதே போன்று சம்பூர் பிரதேசத்தில் 876 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதியே வர்த்த மானியில் கையெழுத்து வைத்த பின்னரும் அஅங்கு மீள் குடியேற்றத்தை தாமப்படுத்த படுகின்றது

மீள் குடியேறிய மக்களையும் பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் தந்த வாக்குறுதிகளை தேர்தலில் வென்ற பின்னர் அவற்றை நிறைவேற்ற வில்லை.

அதேவேளை சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரிக்கை விடுத்து இருந்தோம் பல இளைஞர்கள் 20 வருட காலத்திற்கு மேலாக எந்தவிதமான விசாரணைகளும் இன்றி சிறைகளில் வாடுகின்றார்கள்

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அந்த மாதத்திலையே விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு வாக்குறுதி தந்து இருந்தார்கள் தற்போது ஆறுமாத காலமாகியும் இன்னமும் அந்த இளைஞர்கள் விடுவிக்கப்படவில்லை

பட்டதாரி மாணவர்கள் வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை அவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்கள் பலர் வடக்கு கிழக்கில் உழைப்பற்றவர்களாக இருக்கின்றார்கள் அவர்களும் வேலை வழங்க வேண்டும் என கோரி இருந்தோம்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து இவை தொடர்பில் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டும் என இக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளோம்.

23 ஆவது திகதி பாராளுமன்றம் கூடும் வேளையில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் படி நிலங்கள் விடுவிக்கப்பட வேணும் மீள் குடியேறியவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் இத்தகைய அனைத்து விடயங்களையும் இந்த அரசாங்கத்துடன் பேசி ஒரு முடிவை எட்ட உள்ளோம். என மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila