எல்லாத்தையும் எல்லாருக்கு எப்படி சொல்ல முடியும் என்று பாய்கிறார் பின் வாசல் சுமந்திரன் !

வீணான அந்த சர்சைக்கு இடம் கொடுக்காமல் இருக்க தான் இந்த லண்டன் பேச்சுவார்த்தையை வெளி அரங்கில் நடத்தாது திரை மறைவில் நடாத்தினோம். அது தொடர்பில் கூட்டமைப்பில் உள்ள எல்லோருக்கும் பறை தட்டி சொல்ல வேணும் என்று இல்லை என தமிழ் தேசிய கூடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நான் லண்டனுக்கு போய் வந்தது தொடர்பில் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன இலங்கை பாராளுமன்றத்தில் கூட எதிர்க்கட்சி தலைவர் இது வியாழக்கிழமை சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வியையும் கேட்டுள்ளார். விடுதலை புலிகளுக்கு சார்பான அமைப்புக்களின் தடைகளை நீக்குவது சம்பந்தமாக நானும் வெளியுறவு அமைச்சரும் தடை செய்யப்பட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து லண்டனில் பேச்சு வார்த்தை நடத்தினீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் பதில் அளிப்பார் நாங்கள் எங்கள் கூட்டம் முடிவடைந்த கையேடு அது தொடர்பில் அறிக்கையும் வெளியிட்டு உள்ளோம் அதில் அது எது சம்பந்தமான கூட்டம் என்று கூட தெளிவாக சொல்லி இருந்தோம்
எங்களுடைய மக்களின் உடனடி தேவைகள் சம்பந்தமாக அதாவது காணிகள் விடுவிக்கப்படுதல் விடுவிக்கப்பட்ட காணிகளில் அவர்கள் சென்று வாழ வீடுகள் அமைத்துக்கொடுத்தல் அதற்கான நிதிகளை எப்படி பெறுதல் , அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தொடர்பில் நாங்கள் பகிரங்க படுத்தாத ஒரு சம்பாசனையில் ஈடுபடவே நாங்கள் இருந்தோம். அது பகிரங்க படுத்தப்படாததகவே இருந்திருக்க வேண்டும் ஏனெனில் இப்பொழுது காணிகள் விடுவிக்கப்படுவது சம்பந்தமாகவும் அரசியல் கைதிகள் விடுவிக்கபடுவது சம்பந்தமாகவும் தெற்கிலே தேவையற்ற சில பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றான. அதை அரசியல் மயப்படுத்தி புலிகளுக்கு புதிய அரசாங்கம் இடம்கொடுக்கின்றது என்ர பொய்யான பிரச்சாரத்தை மஹிந்த ராஜாபக்ஷேவும் அவரது சகாக்களும் செய்து வருவதனால் வீணான அந்த சர்சைக்கு இடம் கொடுக்காமல் இருக்க தான் இந்த பேச்சுவார்த்தைகளை நாங்கள் வெளி அரங்கில் நடத்தாது திரை மறைவில் நடாத்தினோம்
ஆனாலும் அந்த செய்தி ஏதோ விதத்தில் கசிந்த காரணத்தால் அது தற்போது சர்ச்சையாக எழுந்துள்ளது. சர்ச்சைகள் எழுந்ததாலையே நாம் எதை பற்றி பேசினோம் என்று சொன்னோமே தவிர என்ன பேசினோம் என்று சொல்லவில்லை அதனை சொல்ல போவதும் இல்லை இது மக்களுக்கு தெளிவாக விளங்கும். எல்லா விடயங்களையும் பகிரங்கமாக வீதிகளில் பேசி ஊடகவியலாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடாத்தியது கிடையாது.அதற்கு போதிய காரணங்களும் இருக்கின்றன இப்படியான சவாலான அரசியல் சூழ் நிலையிலையே இப்படியான சில விடயங்கள் குறித்து வெளி அரங்கில் பேசாது தனிபட்ட முறையில் நடாத்துவதே உசிதமானது என்பது எமது கருத்து
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் போக வேண்டாம் என்று பணித்த எந்த கூட்டத்திலும் நான் இதுவரை பங்கேற்றது கிடையாது தலைவருடைய முழு அனுமதியோடை தான் நான் இதிலே பங்கு பற்றினேன்
அது கூட்டமைப்பில் உள்ள எல்லோருக்கும் பறை தட்டி சொல்லிவிட்டு நாங்கள் போகவில்லை விசேஷமாக ஏதாவது செய்தி கிடைத்தால் அதனை ஊடகவியலாளர்களிடம் ஓடிப்போய் சொல்பவர்களிடம் கூட்டம் தொடர்பில் சொல்லாமல் தவிர்த்து இருந்தோம் என்கிறார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila