இறுதி போர்! கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்

இறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநி தியும், அவரது புதல்வி கனிமொழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதது.


தமிழீழ தாயகத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகளை விழுங்கி, முள்ளிவாய்க்கால் கடலோரத்தை எல்லையாகக் கொண்ட வன்னி கிழக்கின் சிறியதொரு நிலத்துண்டுக்குள் நான்கரை இலட்சம் தமிழர்களை நெருக்கித் தள்ளித் தமிழ்க் குருதியில் சிங்களம் திளைத்த பொழுது உண்ணாநோன்பு நாடகம் ஆடிச் செப்படி வித்தை காட்டியவர் முத்துவேலரின் புதல்வர்.


அவருக்கு மேலே ஒரு படி சென்ற அவரது வழித் தோன்றலான கனிமொழி, ஈழமண்ணில் தமிழ்க் குருதி சொரியும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் “உறங் கிக் கொண்டிருக்க முடியாது’ என்று மேடைகளில் ஆவேசமாக முழங்கிக் கொண்டு, மறுமுனையில் ஆயுதங்களைக் கீழே போட்டு சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கடும் அழுத்தம் பிரயோகித்தவர்.

கடைசி வரை கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த மக்களினதோ, அன்றி சிங்களப் படைகளை எதிர்கொண்டு உயிரை வேலியாக்கிப் போராடிக் கொண்டிருந்த போராளினதோ உயிர்களைக் காப்பதற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைக ளையும் எடுக்கவில்லை. மாறாக ஆயுதங்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் கீழே போட்டு சிங்கள அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்வந்தால் மக்களினதும், போராளிகளினதும் உயிர்களைக் காப்பதற்கு இந்தியா நட வடிக்கை எடுக்கும் உத்தரவாதத்தை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அள்ளிவீசிய வண்ணம் இருந்தார்கள்.

இது தொடர்பாகக் கனிமொழி அவர்களால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்களை கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் தொடக்கம் ஐம்பது வாரங்களுக்குத் தொடர் கட்டுரையாக ஈழமுரசில் வெளியி டப்பட்ட “தந்திரிகளின் மறுமுகம்’ என்ற பத்தியில் நாம் அம்பலப்படுத்தியிருந்தோம். அன்றைய சந்தர்ப்பத்தில் கனி மொழி அவர்கள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் இப்பொழுது நான்கு ஆண்டுகள் கடந்த பின்னர் கனிமொழி அவர்கள் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார். 

அதுவும் நான்காம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக விளங்கியவரும், பின்னர் தமிழீழ அரசியல்துறையின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவின் பொறுப்பாளராகத் திகழ்ந்தவருமான எழிலன் அவர்கள் கனிமொழியுடன் செய்கோள் தொலைபேசி ஊடாக உரையாடிய பின்னரே சிங்களப் படைகளிடம் சரணடைந்தார் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிலும், “த இந்து’ என்ற நாளிதழிற்கு வழங்கிய செவ்வியிலும் அவரது துணைவியாரான வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் அறிவித்ததை அடுத்தே கனிமொழி அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளார்.

தான் செய்தது தவறு என்றும், அதற்காக வருந்துவ தாகவும் ஒருவேளை கனிமொழி அவர்கள் கூறியிருந்தால் அவர் மீது எம்மவர்களில் பலர் அனுதாபம் காட்டியிருக்க கூடும். “நடந்தது நடந்து விட்டது. இப்பொழுதாவது தனது தவறைக் கனிமொழி உணர்ந்துள்ளாரே. அதற்காக அவ ரைப் பாராட்டியாக வேண்டும். கனிமொழிக்கு துரோகப் பட்டம் கட்டுவதால் எதனையும் நாம் சாதிக்க முடியாது. எனவே அவர் இழைத்த தவறை மறந்து பெருந்தன்மையோடு நடப்போம். அதுதான் அரசியல் சாணக்கியத்தனமா னது’ என்று கூறுவதற்கு எம்மவர்களில் பலர் போட்டி போட் டுக் கொண்டு வந்திருப்பார்கள். இதை வலியுறுத்திக் கூறுவ தற்காகவே சிலர் பத்திரிகை அச்சிட்டு அனுதாபக் கட்டுரை கூட வெளியிட்டிருப்பார்கள்.

இறுதிப் போரில் சிங்களத் தரைப்படைத் தளபதியாக விளங்கிய சரத் பொன்சேகாவையும், பதில் படைத்துறை அமைச்சராக விளங்கிய மைத்திரிபால சிறீசேனவையும் மன்னித்த எம்மவர்கள், முத்தமிழ் வித்தகர் என அறியப் பட்ட கருணாநிதியின் புதல்வியையா மன்னிக்க மாட்டார் கள்?

நல்ல வேளையாகத்தான் புரிந்த தவறைக் கனிமொழி ஒப்புக் கொள்ளவோ, அன்றி அதற்காகக் குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. மாறாக, “யார் அந்த சசிதரன் என்கிற எழிலன்? அப்படி ஒருவரை எனக்குத் தெரியாதே! அவர் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பி னர்களில் ஒருவராக இருந்திருந்தால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கும். சாதாரண உறுப்பினர் என்றால் எனக்கு எப் படித் தெரியும்? அப்படி ஒருவரையே எனக்குத் தெரியாது எனும் பொழுது அவரைச் சரணடையுமாறு செய்கோள் தொலைபேசியில் நான் எப்படிக் கூறியிருப்பேன்?’ என்றெ ல்லாம் கனிமொழி கதை அளந்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பு அரங்கேற்றி ஆறு ஆண்டுகள் கடந்திருப்பதால் எழிலன் என்ற பெயரில் இயங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன் னணி உறுப்பினரைக் கனிமொழி மறந்துவிட்டாரோ தெரிய வில்லை. அல்லது இறுதிப் போரில் சிங்களப் படைகளிடம் சரணடைய வைக்கப்பட்டுக் காணாமல் போனவர் ஆக்கப் பட்ட எழிலன் இனியும் திரும்பி வரப்போவதில்லை என்று 2009ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அலரி மாளிகையில் கனி மொழியைச் சந்தித்த பொழுது ஏதாவது உத்தரவாதத்தை மகிந்த ராஜபக்ச வழங்கினாரோ தெரியவில்லை.

இவை பற்றியயல்லாம் ஆராய்ச்சி செய்வது எமது நோக்கமன்று. இறுதிவரை எழிலன் அவர்களுடன் கூடவிருந்து, சிங்களப் படைகளால் அவர் கொண்டு செல்லப்படுவதை நேரில் கண்டவர் என்ற வகையில், கனிமொழியுடன் எழிலன் அவர்கள் தொலைபேசியில் உரையாடியது தொடர் பாக அனந்தி அவர்கள் விடுத்திருக்கும் அறிவித்தல் உண்மையானதும், நம்பகமானதும் என்றே நாம் கருத வேண்டும். தவிர தனது துணைவர் தொலைபேசியில் உரையாடாத ஒருவருடன் அவர் உரையாடியதாகப் பொய்யுரைக்க வேண்டிய தேவை அனந்தி அவர்களுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே பொய்யுரைப்பது கனிமொழியே தவிர அனந்தி அல்ல என்பதே சரியான பார்வையாக இருக்கும்.

சரி, எழிலன் அவர்களுடன் கனிமொழி தொலைபேசியில் உரையாடவில்லை என்றே வைத்துக் கொள் வோம். சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு எழிலன் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவருக்கும் தான் அறிவுரை கூறவில்லை என்று கனிமொழி கூறுவதையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியயன்றால் ஆயுதங்களை கீழே போடுமாறு வலியுறுத்தித் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு தான் எழுதிய இரண்டு மின்மடல்களுக்கும் என்ன விளக்கத்தைக் கனிமொழி அளிக்க போகின்றார்?

இதனைக் கனிமொழி அவர்களுக்கான சவாலாகவே விடுகின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி சிங்களப் படைகளின் முற்றுகைக்கு உள் ளாகியிருந்த 29.03.2009, 30.03.2009 ஆகிய நாட்களில் கனிமொழி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பா.நடேசன் அவர்கள் அவசர செய்தியயான்றை அனுப்பியிருந்திருந் தார். 29ஆம் நாளன்று பா.நடேசன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் செய்தியைத் திறக்க முடியவில்லை என்று கனி மொழி அவர்கள் கூறியதை அடுத்து, அதே செய்தியை 30ஆம் நாளன்றும் பா.நடேசன் அனுப்பினார்:

“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,

தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின் றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத் தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அர சின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென் றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண் ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பா வும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத் தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப் பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர் காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.

நன்றி,

என்றும் உங்கள் அன்பான,
சகோதரன் பா.நடேசன்“
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila