1) பேரானது 2009 ஆண்டு இறுதிக்கட்டத்தினை அடைந்தபோது எவ்வித முயற்சிகளும் போராட்டங்களும் செய்யாமல் இந்தியாவில் ஒளித்திருந்தமை
2)போர் முடிவுக்கு வந்ததும் சம்பந்தன் பாராளுமன்றில் உரையாற்றும்போது பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக மகிந்த இராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார் .அதேவேளை புலிகள் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றார்
3) கட்சியின் முடிவை மீறி சுமந்திரன் தம்பதியினருடன் சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். ஆனால் எந்தப்பொழுதிலும் முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவு தினத்தில் எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்கவில்லை
4)சம்பந்தன் யாழில் நடை பெற்ற மேதினக்கூட்டத்தில் ரணிலுடன் இணைந்து தேசியக்கொடியினை தூக்கிப்பிடித்ததுடன் அதனை நியாயப்படுத்தினார்
5)சுமந்திரன் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில நாமல் இராஜபக்சவுடன் இணைந்து கிரிக்கட் விளையாடினார்
6) சுமந்திரனும் சம்பந்தனும் சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதை வரவேற்று பேசினார்கள்
7) சர்வதேச விசாரணையினை ஆதரித்த தங்களின் கொடும்பாவிகளை படங்களை எரித்தவர்களை புலிகளின் வால் என குறிப்பிட்டார் சுமந்திரன்
8)சுமந்திரன் புலிகளின் கொள்கைககளை நாங்கள் ஏற்கவில்லை நாம் பயங்கர வாதத்தினை எதிர்க்கின்றோம் என புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பேட்டி வழங்கினார்
9)டேவிட் கமரூன் யாழ் வந்தபோது போராட்டம் நடாத்தியவர்களின் கடிதத்தினை கமரூனுக்கு வழங்காதமை.அது குறித்து அனந்திக்கு ஏய்ப்பு காட்டியமை. போராடிய மக்களை அவர்கள் சந்திக்கவும் இல்லை காரில் தப்பி ஓடினர்.
10) வடமாகாணசபையின் இனப்படுகொலைத்தீர்மானம் தேவையற்றது என அறிக்கை வெளியிட்டமை
11)போரின் முடிவின் பின் கூட்டமைப்பில் புளொட் அமைப்பினை இணைத்தமை ஆனால் காங்கிரசை தமிழர் விடுதலை கூட்டணியை வெளியேற்றும் வகையில் நடந்துகொண்டமை
12) முன்னாள் போராளிகளின் சனநாயக பிரவேசத்திற்கான வேண்டுகோளை முற்றாக நிராகரித்தமை
13)வாக்கு கேட்கும் போது மட்டும் மாவீரகள் புலிகள் பற்றி பேசுதல் பின்னர் புறக்கணித்தல்
14)முன்னைய அரசுடனான பேச்சுவார்தைகளில் தீர்வுத்திட்டம் தொடர்பில் உத்தேச தீர்வுத்திட்டம் எதுவும் சமர்ப்பிக்காமை அல்லது தாம் அரசிடம் சமர்பித்ததாக கூறும் திட்டம் குறித்து மக்களுக்கு வெளியிடாதமை
15) மைத்திரி அரசுடன் காணாமல்போனோர் சரணடைந்தோர் அரசியல்கைதிகள் தொடர்பில் சரியான பேரம் பேசலை செய்ய தவறியமை. 100 நாட்களில் அவற்றில் முன்னேற்றம் எதனையும் எட்டாமை
16)கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி உட்கட்சி சனநாயகத்தில் மிகவும் மோசமாக பாரபட்சமாக நடந்துகொணடமை.மாவை சுமந்திரன் சம்பந்தன் மட்டும் முடிவெடுத்தல்
17)இதுவரை கூட்டமைப்பினை அரசியல்கட்சியாக பதிவுசெய்யாதமை.
18)சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் கூட்டங்களில் பெரிதளவில் பங்குபற்றாதமை சாட்சியஙகளை வழங்காதமை
19) பிடித்த உள்ளுராட்சிமன்றங்கள் பலவற்றில் முறையற்ற நிர்வாகம்.பாரபட்சமான அணுகுமுறைகள்.பிழையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமை.
20)இளைஞர் அணிகள் ஊடான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்த தவறியதுடன் இளைஞர்களை புறக்கணித்தமை
21)வேட்பு மனுக்களில் புதியவர்களுக்கான இளைஞர்களுக்கான இடத்தினை உறுதிசெய்ய தவறியமை
22)போராட்டங்கள் நிபந்தனைகள் தொடர்பில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை
23) போர்க்குற்றவாளி சரத்பொன் சேகாவுக்கு சனாதிபதித்தேர்தலில் ஆதரவு தெரிவித்தமை
இன்னும்பல…
நன்றி : ஒருநாடு இரண்டுதேசம் (முகநூல்)