
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். இரு நாட்கள் முன் இதே பாணியில் அரச அலுவலகரான கிராமசேவையாளரை எச்சரித்தார். அதே முறையை பின்பற்றி தமிழரின் தாயகத்தில் காணிஉரிமையாளரும் மதகுருவான புவி ஐயாவை எச்சரிக்கும் போது.இதற்கு அணைத்து இந்துமதகுருக்கள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு பதுளை வீதியிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தனியார் காணிக்குள் அத்துமீறி நுளைந்தமையினால் ஏற்பட்ட பதற்ற நிலையை அறிந்து வருகைதந்தபோதே வியாளேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,மட்டக்களப்பு விகாராதிபதி தமிழ் மக்களுடனும் பொலிஸாருடனும் தகாத வார்த்தைப் பிரயோங்களை பிரயோகிப்பது என பல்வேறு முறைகேடான விதத்தில் செயற்பட்டு வருகின்றார்.
அண்மையில் பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் உட்பட கிராம சேகவருக்கு குறித்த விகாராதிபதியினால் ஏற்பட்ட அவமானம் என அடாவடித்தனத்தின் உச்சக்கட்டத்தை காட்டுகின்றது. சேபித தேரர் வாழ்ந்த இந்த நாட்டில் இவ்வாறு காவி உடையை உடுத்திக்கொண்டு இலங்கையிலே தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபடுவதாக செல்லும் பட்டியலில் மட்டக்களப்பு விகாராதிபதி முதலிடத்தில் பெறுவார் எனவும் நினைக்கின்றேன்.
இவரின் செயற்பாடுகளும் அந்தளவுக்கு முறைகேடான விதத்தில் உள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் புத்தர் சிலை மற்றும் பன்சாலை இருந்ததாகவும் கூறி ஒரு குழப்பத்தை விகாராதிபதி ஏற்படுத்துகின்றார். இந்த செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் இதன்போது கூறியுள்ளார்.குறித்த காணி 9 ஏக்கர் பரப்பளவை கொண்டமைந்ததாகவும் விகாரை இருந்ததாகவும் காரணத்தை காட்டி தனியார் காணிக்குள் அத்துமீறியுள்ளார். பொலிஸாருடனும் மிகவும் முறைகேடான விதத்தில் நடந்துகொண்டுள்ளார்.
காணிக்குள் அத்து மீறி நுளையக்கூடாது என நீதிமன்ற கட்டளை இருந்தும் நீதிமன்ற சட்டத்தை மீறி செயற்படுகின்றார். இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கம் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற தருனத்தில் இவ்வாறானதொரு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையிலே இன முறுகலை ஏற்படுத்தி பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு விகாராதிபதி போன்றவர்கள் மாவட்டத்தில் இருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். உரிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார். சிலர் கருதுகின்றார்கள் அரச மரம் இருந்தால் அங்கு புத்தர் சிலை இருக்கவேண்டும், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு இல்லை, இப்பிரதேசம் தமிழர் பூர்வீகமாக வாழ்ந்த இடம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.