விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை கேட்டதும் கூட்டத்தில் எழுந்த கரகோசத்தையும், ஆர்பரிப்பையும் பார்த்து புன்முறுவல் பூத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்.
யாழ்.மருதனார்மடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை அவதானித்துக்கொண்டு நின்றார்கள்.

அவ்வேளை பேச்சாளர் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரை உச்சரித்த போது கூட்டத்தில பலத்த கரகோஷம் எழுந்ததுடன் கூட்டத்தில் இருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர்.
பிரபாகரன் எனும் பெயரை கேட்டவுடன் மக்கள் மத்தியில் எழுந்த கரகோஷத்தையும் ஆர்ப்பரிப்பையும் பார்த்து ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் புன்முறுவல் பூத்ததமையும், அதனை தமது குறிப்பேட்டில் குறிப்பேடுத்ததமையும் அவதானிக்க முடிந்தது.