தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தனித்து தேர்தலில் ஒரு அணியை இறக்க போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினர் தான் ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சி மக்களது ஆணையையும் மக்களது கருத்துகளையும் உறுப்பினர்களது எண்ணங்களையும் மதிக்காமல் புரிந்து கொள்ளாமல் தமிழரசுக் கட்சித் தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுவதை எதிர்த்து கட்சிக்குள் தொடர்ந்து போராட போவதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.